மூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன

Date:

Share post:

மூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன

விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந் தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான்.
பின் சிவனை  நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க,
பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம்நாள் சந்திர தரிசனம் காண்பவர்களு க்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
மூன்றாம் நாள் வரும் சந்திரனை  அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும்
இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால்  சந்திரனின் பரி பூரண அருளைப் பெறலாம்.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பண்டிகைக்கு முக்கியமாக நாளாகக் கருதுகிறார்கள்.

பொதுவாக, அனைவருக்கும் மூன்றாம் பிறை என்பது காரியங்களைச் செய்வதற்கு எப்படிப்பட்ட நாள்?

வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம்.

இத்தாய் பிறை சூடிய பெருமானே என்று நாயன்மார்கள் பாடுகிறார்கள். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார்.

காமாட்சி அம்மனைப் பார்த்தாலும் அந்த மூன்றாம் பிறைதான்.

இந்த மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை.

ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும்.

ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ,

மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும்.

முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும்.

வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும்.

அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது.

இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது.

அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.

அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை.

அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...