ஆதார் கார்டில் புதிய வசதி அறிமுகம் உங்க மொபைல் எண் இமெயில் ஐடி தானா

Date:

Share post:

ஆதார் கார்டில் புதிய வசதி அறிமுகம் உங்க மொபைல் எண் இமெயில் ஐடி தானா

ஆதாரில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI ) இப்போது அனுமதிக்கிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டை வழங்கி வருகிறது.

அந்த ஆதார் அட்டை தான் இப்போது பல்வேறு அடிப்படை அரசு திட்டங்களுக்கு கட்டாயமாக உள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக ஆதாரில் பல்வேறு வசதிகளை புதிது புதிதாக அப்டேட் செய்து வருகிறது.

ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் என பல அடிப்படை விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன

இந்நிலையில் புதிததாக ஆதாரில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்க்க.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI ) இப்போது அனுமதிக்கிறது.

பொதுவாக மக்கள் சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய மொபைல் எண்களில் எந்த ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

என்பது பற்றி தெரியவில்லை என்றும் இந்த மொபைல் எண்ணா அல்லது அந்த மொபைல் எண்ணா என்று குழப்பத்தில் இருப்பதும் UIDAI இன் கவனத்திற்கு வந்தது.

இந்த குழப்பம் காரணமாக ஆதார் OTP வேறு ஏதேனும்.

மொபைல் எண்ணுக்குப் போய்விடுமோ என்று ஆதார் வைத்திக்கும் பலரும் கவலைப்பட்டனர்.

இந்த நிலையில் தான் மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்க்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள அணையம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியின் மூலம், பொதுமக்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் எது, இமெயில் முகவரி என்பதை மிக எளிதாக சரிபார்க்க முடியும்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வசதியை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar ஆப் மூலம் சரிபார்க்க மின்னஞ்சல்/மொபைல் எண்’ அம்சத்தின் கீழ் பெறலாம்.

இதில் தான் நீங்கள் உங்க்ள் சொந்த மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் அந்தந்த ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

இந்த வசதியின் காரணமாக மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் மட்டும் தான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவு முடியும்.

ஒருவேளை குறிப்பிட்ட மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால் அதை உங்களுக்கு இணையதளத்திலேயே தெரிவித்துவிடும்.

அத்துடன் நீங்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்திவிடும்.

ஆதார் கார்டில் மொபைல் எண் இமெயில் ஐடி

அதாவது உங்கள் மொபைல் எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தால், நீங்கள் டைப் செய்த மொபைல் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது.

போன்ற மெசேஜ் உங்களுக்கு திரையில் காட்டும்.

ஆனால் ஒருவேளை உங்கள் மொபைல் எண் உங்களுக்கு சரியாக நினைவில் இல்லை என்றால், நீங்கள் ஆதார் அட்டைக்கு முதல் முதலில் பதிவு செய்யும் போது.

கொடுத்த மொபைலின் கடைசி மூன்று இலக்கங்களை உங்கள் ஆதார் போர்டல் அல்லது mAadhaar செயலியில் சரிபார்க்கும் அம்சத்தில் அறிந்து கொள்ளலாம்.

எனினும் உங்கள் ஆதாரில் வேறு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இருந்தாலே அல்லது தவறாக இருந்தாலோ அதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

அதற்கு நீங்கள் அருகில் உளிள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு அவர்கள் உங்கள் மொபைல எண் மற்றும் இமெயில் முகவரியில் உள்ள பிழைகளை சரி செய்து மாற்றித்தருவார்கள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...