தமிழ்நாட்டில் கனமழை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்

Date:

Share post:

தமிழ்நாட்டில் கனமழை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும் 11 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

வரும் 7ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல ஊர்களில் கோடை மழை கொட்டித்தீர்த்துள்ளது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது.

சாலைகளில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்தின்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ., சாத்தூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்செங்கோடு, திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் நந்தியாறில் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

எடப்பாடி, சின்கோனா, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், மாமல்லபுரத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவானது.

பூதலூர், காஞ்சிபுரம், கடலூர், திருக்கழுக்குன்றம், எண்ணூரில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது.

சங்கராபுரம், குமாரபாளையத்தில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் 6ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கில் ஒரு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் 7ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

இதன் காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய் வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய வர்தா புயலையும் சேர்த்து 6 புயல்கள் மிகத் தீவிரமானவை என்று சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.

இதேபோல மூன்று தீவிர புயல்கள் சென்னையைத் தாக்கியுள்ளன. சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 22 புயல்கள் தாக்கியுள்ளன.

1972 ஆம் ஆண்டு சென்னையை புயல் தாக்கிய போது 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பதிவானது.

கனமழை வங்கக் கடலில் குறைந்த

1984ஆம் ஆண்டு மற்றொரு புயல் சென்னையைத் தாக்கியது. இந்தப் புயல் ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்தது.

1985ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலானது நெல்லூர் வழியாக கரையைக் கடந்தது.

அப்போது காற்றின் வேகமானது மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வரை வீசியது.

1994 ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய அதி தீவிர புயலால் 2 நாட்களில் 350 மிமீ மழை பதிவானது.

காற்றின் வேகமானது 120 கிமீ முதல் 140 கிமீ வரை வீசியது. அக்டோபர் 29ஆம் தேதி உருவான புயல் 31ஆம் தேதி சென்னையின் கரையை கோரமாக சீண்டியது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...