சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா

Date:

Share post:

சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா

பெனும்பிரல் சந்திர கிரகணம் நாளை வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி நாளில் நிகழ உள்ளது.

இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது.

இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியாது என்றாலும் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும்.

அப்போது, ​​பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது.

நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும்.

கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம்.

அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம்.

கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால்,

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

அதன் காரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.

கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம்.

தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.

சந்திரகிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும்.

நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும்.

சந்திர கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம்.

அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.

பொதுவாக சந்திர கிரகணத்தை முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையாக நாம் பார்த்திருக்கிறோம்.

நாளை சித்ரா பவுர்ணமி அன்று நிகழும் இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும்.

மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம்.

இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும்.

இந்திய நேரப்படி இந்த பக்தி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும்.

இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடையும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...