அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் வெயில் எப்படி இருக்கும்

Date:

Share post:

அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் வெயில் எப்படி இருக்கும்

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி படிப்படியாக உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கோடை மழை பெய்து மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

இந்த திடீர் மழைக்கு மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவியது முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

தற்போது மழையின் தாக்கம் குறைந்த நிலையில் வெயில் அதிகரித்து வருகிறது. அதிலும் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது.

அக்னி நட்சத்திரம் தொடக்கம்

கடந்த ஏப்ரல் மாதமே பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி எடுத்தது.

இந்த சூழலில் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இனிமேல் தான் ஆட்டமே இருக்கிறது என்று சொல்வதை போல, வெயிலின் உச்சத்தை மக்கள் அச்சத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

நேற்று (மே 4) தொடங்கிய அக்னி நட்சத்திரம் வரும் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. முதல் நாளான நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து தான் காணப்பட்டது.

கரூரில் அதிக வெப்பம்

சில இடங்களில் மட்டும் வெப்பத்தின் தாக்கம் இருந்தது. அதிகபட்சமாக கரூரில் 99.5 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் முதல் நாளே 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும்.

இம்முறை சற்றே ஆறுதல் அளித்திருக்கிறது. ஆனால் வரக்கூடிய நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் லேசான மழை

இதுதொடர்பான அறிவிப்பில் மே 5 முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 8ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில் மே 6 முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் வெயில் எப்படி இருக்கும்

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி படிப்படியாக உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சென்னையில் வானிலை

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கம்

வெயிலை சமாளிக்க பழங்கள், குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதை அதிகப்படுத்தி உள்ளனர்.

கோடை விடுமுறையை ஒட்டி ஏற்கனவே தங்களின் பயணத் திட்டங்களை பலரும் தயார் செய்து வைத்துள்ளனர்.

அதன்படி மலை பிரதேசங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். மே 28ஆம் தேதிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திரி வெயில்

பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமி, சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது.

ஜோதிட அடிப்படையில் பார்க்கும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்.

இதன்படி, தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார்.

சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்து விடுகிறார்.

வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சுபகாரியங்கள்

அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள்.
ஆனால் சில சுபசெயல்களை நடத்தலாம் என்கின்றன நட்சத்திரங்கள்.

திருமணம், சீமந்தம், சத்திரங்கள் கட்டுதல், உபநயனம், பரிகார வேள்விகள் ஆகியவற்றைச் செய்யலாம்.

ஆனால், வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதைத் தவிர்க்கலாம். தோட்டம், மலர்ச் செடிகள், குளங்கள், குட்டைகள் வெட்டுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு செய்தல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாக்குதல் ஆகியவை வேண்டாம்.

அக்னி நட்சத்திரத்துக்கு முன்னர் தொடங்கிய பணிகளை இக்காலகட்டத்தில் செய்யலாம் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...