வைட்டமின் டி குறைஞ்சா பாலியல் ஆர்வம் குறையுமா

Date:

Share post:

வைட்டமின் டி குறைஞ்சா பாலியல் ஆர்வம் குறையுமா

வைட்டமின் டி நிறைந்திருக்கிற உணவுகள் மிகக் குறைவு. அவை மட்டுமே நம்முடைய உடலுக்குப் போதுமானதாக இருப்பதில்லை.

அதனால் தான் போதிய அளவு வைட்டமின் டி – யை சூரிய ஒளியில் இருந்து பெற அறிவுறுத்தப்படுகிறது. சூரிய ஒளி தான் அதிக அளவு வைட்டமின் டி கிடைப்பதற்கான மூலமாக இருககிறது.

வைட்டமின் டி பற்றாக்குறைக்கும் பாலியல் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக பெரிதும் யாரும் யோசிப்பதில்லை.

ஆனால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் சூரியக் கதிர்வீச்சும் வைட்டமின் டியும் ஒரு மிகப்பெரிய காரணியாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவது ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பாதிப்பதாகக் கூறப்பட்டாலும் பெண்களின் பாலியல் ஈர்ப்பிலும் இது போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் குறைந்த ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக அமைகிறது.

வைட்டமின் டி பிறப்புறுப்புகளின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

அதோடு ரத்த நாளங்களின் சுவர்களை மேம்படுத்துவதன் மூலமும் ரத்த ஓட்டத்தை ஆதரிக்கவும் வீக்கங்களை குறைக்கவும் செய்கிறது.

வைட்டமின் டி குறைபாடு மற்றும் அதோடு தொடர்புடைய சில காரணிகளால் ஈஸ்ட்ரோஜன் குறைபாடும் அதனால் பாலியல் ஆர்வமும் குறையும்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு பாலியல் ஈர்ப்பை மட்டுமல்லாது பிறப்புறுப்பின் சுவரில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது.

வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்போது ஈஸ்ட்ரோஜன் சுரப்பும் குறையும்.

இதனால் பாலியல் ஈர்ப்பும் குறைவதோடு பிறப்புறுப்பில் அதிகப்படியாக வறட்சி உண்டாகும். இதனால் பாலியல் ஈர்ப்பும் குறையும்.

வைட்டமின் டி குறைபாடு அல்லது வேறு ஏதேனும் காரணிகளால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால்,

உடலில் முடி குறைதல், சருமத்தின் நிறத்தில் குறைபாடு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

ஆய்வின்படி, பாலியல் ஈர்ப்பு மற்றும் செயல்திறன் குறைவாக இருந்த ஆண்கள், தங்களின் பாலுணர்வை அதிகரிக்க

குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இப்போது கோடை காலம் வந்துவிட்டது. அதனால் காலையில் மிக வேகமாகவே சூரிய ஒளி வந்துவிடும். அதனால் இன்னும் கூடுதலாகக் கூட வைட்டமின் டி யை பெற முடியும்.

அதிகாலையில் வீசும் சூரியக் கதிர்வீச்சுக்கள் நம்முடைய உடலில் அதிக அளவில் மெலனோசைட்டை தூண்டும் ஹார்மோனை (MSH) உற்பத்தி செய்கிறது.

இந்த ஹார்மோன் மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த மெலனின் நம்முடைய சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த மெலனின் ஹார்மோனும் நம்முடைய உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு தங்களுடைய செயல்திறன்களை அதிகரித்துக் கொள்கிறதாம்.

இதனால் மெலனின் உற்பத்திக்கும் பாலியல் இன்பம் அதிகரிப்பதற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அடிப்படை உணவுகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது மற்றும் வைட்டமின் டி இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

சால்மன் போன்ற பிரபலமான கொழுப்பு நிறைந்த மீன்கள் வைட்டமின் D இன் அருமையான மூலமாகும்.

சால்மன் மீனில் உள்ள வைட்டமின் Dயின் அளவு அது காட்டு அல்லது வளர்க்கப்பட்டதா என்பதைப் பொறுத்து கணிசமாக மாறுபடும். 

காட்டு சால்மன் பொதுவாக அதிக வைட்டமின் டி உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...