கடன் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் கடவுள்

Date:

Share post:

கடன் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் கடவுள்

கடன்கள் மற்றும் நோய் தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் ‘ரிண-ருண விமோச்சனர்’ ஆவார்.

இவர் அருள் புரியும் கோயில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ளது.

மன்னார்குடியில் திருபாற்கடல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது சிவாலயங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்த இக்கோயிலில் மிகவும் போற்றப்படுபவர்.

தனிச்சந்நதியில் அருள்புரியும் ‘ரிண- ருண விமோச்சனர்’ ஆவார். இங்கு அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதருக்கு திங்கட்கிழமையில் அபிஷேகம் முடிந்ததும் தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும்.

காசி விசாலாட்சிக்கு வெள்ளிக்கிழமையிலும். வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமையிலும், ராகு காலத்தில் துர்க்கைக்கும், தேய்ப்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன

‘ரிண-ருண விமோச்சனர்’ தெற்கு திசை நோக்கி தனி சந்நதியில் பெரிய சிவலிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார்.

இக்கோயிலில் மேற்கு கோபுரவாசல் அருகேயுள்ள கமலாயத் திருக்குளத்தில் நீராடி, அங்கு அருள் புரியும் ‘படிக்காசு விநாயகரை வழிபட்ட பின் தியாகராஜப் பெருமானையும்.

அன்னை கமலாம்பிகையையும், நீலோத்யல அம்பாளையும், புற்றீஸ்வர(வான்மீக) பெருமானையும் வழிபட்டபின் ‘ரிண-ருண விமோச்சனப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும் பதினோருமுறை வலம் வந்து இந்த ஈஸ்வரரின் இடது புறத்தில் தனிச் சந்நதியில் சன்டேஸ்வரராக அமர்ந்திருக்கும் எமனையும் வழிபட்டால் நோய் நொடிகளிலிருந்தும், கடன் பிரச்சனைகள், வழக்குகள்.

குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

அமாவாசை, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து மிளகு கலந்த உப்பினை இவரது திருவடியில் சமர்ப்பிப்துடன்

வில்வபத்ரம், ரோஜா, நாகலிங்க புஷ்பம், வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் வழிபட்டாலும் தீராதநோய்கள். கடன்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கேக்கரை பகுதியில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு விஸ்வநாதர் சுவாமி கோயில் இருந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயில் ராமர் பாதம் பட்ட இடமாகவும் காசிக்கே வீசம் என்ற ஐதீகத்தையும் கொண்டுள்ள கோயிலாகும்.

இந்நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி உபயதாரர்கள் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற்ற நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த 22ந் தேதி முதல் ஐயப்பன் சிவாச்சாரியார் தலைமையில் முதல் கால யாகசாலை பூஜை துவங்கி இன்று காலை வரையில் 4ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் மகா பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் கடஙகள் புறப்பாடு நடைபெற்று விசுவநாதர், விசாலாட்சி அம்மன் உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் சிவாச்சாரியார்கள் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோவிலின் சில முக்கிய அம்சங்கள்…

துவஜஸ்தம்பம் இல்லாத 2 அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய ஆலயம். கருவறை சன்னதி, அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் ஒரு முக/நர்த்தன மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் (இருவர்), கஜலட்சுமி, கால பைரவர், சிவலிங்கங்கள், நவகிரகங்கள் ஆகிய சன்னதிகளில் மூலவரை (மேற்குத் திசை) நோக்கிய ஒற்றை வரியில் உள்ளன.

மகா மண்டபத்தில் ஸ்ரீ பூதேவி மற்றும் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ பெருமாள், நால்வர், அர்த்தநாரீஸ்வரர், விநாயகர் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்ரமணியர் ஆகியோருக்கு.

வெளி பிரகார சுவரில் ஸ்ரீ நடராஜர் மற்றும் காளி ஸ்டக்கோ சிலைகள் உள்ளன.

நடராஜர் மற்றும் சோமாஸ்கந்தர் சந்நிதியை ஒட்டிய மகா மண்டபம். அம்மன் மற்றும் மூலவர் சந்நதியின் முன் கூரையில் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...