தினமும் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்!

Date:

Share post:

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்!

நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்விற்காக நம் அனைவருக்கும் நடைப்பயிற்சி செய்வது மிக அவசியமாகும்.

நடைப்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலை 5-6மணி, கால்களுக்கு நன்கு பொருத்தப்பட்ட ஷூக்கள் (Well fitting Shoe’s) சிறந்தது.

நடைபயிற்சி செய்வதால் (Communicable diseases) மற்றவர்களிடத்திலிருந்து வரக்கூடிய தொற்று நோய்கள், மற்றும் தொற்றாத (Non-communicable diseases) நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

நடைப்பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் அல்ல, முழு உடலையும் ஆதாவது தலை முதல் பாதம் வரை, உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பலப்படுத்துகிறது, மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளும் தரக்கூடியதாகும்.

ஆண்களும் பெண்களும், என எல்லா வயதினரும், குறிப்பாக சிறுவர் சிறுமிகள் தினமும் குறைந்தது 20 நிமிட நடைப்பயற்சி செய்யும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக சில மருத்துவ ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது,

மேலும் அனைவருக்கும் உடலை ஆரோக்கியமாகவும், மனதை மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்லவும் உதவுகிறது .

காலையில் நடைபயிற்சியின் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்வதோடு, மூளை நரம்பியல் சுற்றுகளைத் தூண்டி, உடலை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

மிக முக்கியமாக நம் உடலில் உள்ள மூட்டுகளை, குறிப்பாக முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளை (Knee and Hip joints) பலப்படுத்த நடைப்பயிற்சி அவசியமாகும்.

நீண்ட நேர பயணத்தின்போது, கை, கால்களில் ஏற்படும் வலி, வீக்கங்களை குறைக்க கட்டாயம் வழக்கமான (Regular Walking) நடைபயிற்சி வேண்டும்.

பெரியவர்கள், வயதானவர்கள் மூட்டு வலி அதிகமாக இருந்தால், சாதாரண தரையில் நடைப்பயிற்சி செய்யாமல், மாறாக பச்சை புல் இடங்களில் நடக்கலாம். இவ்வாறு நடப்பதால், கால்களுக்கு இதமாகவும், வலி வீக்கங்களையும் குறைத்திடும்.

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இதயத்தை பலப்படவும், ​தொடர் தும்மல், ஆஸ்துமா, போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், மற்றும் நுரையீரலுக்கு நல்ல சுத்தமான காற்று சென்று, எந்த சிரமமும் இல்லாமல் எளிதாக சுவாசிக்க உதவி புரிகிறது.

நடக்கும்போது ரத்தத்தில் உள்ள நச்சுகள் வியர்வை வழியாக வெளியேற்றி, உடல் சூட்டையும் தனியா செய்கிறது. தொடர்ந்து 15 – 20 நடக்கும்போது மூலையில் ஹாப்பி ஹார்மோன் சுரப்பதால் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறைக்கவும்,

நாள்பட்ட நோய்களான இரத்த அழுத்தம், பதற்றம், அதிக உடல் எடை, நீரழிவு போன்ற நோய்கள் நடைபயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

நடைப்பயிற்சி ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும்.

நடைபயிற்சிக்கு பிறகு, தேவையற்ற கொழுப்புகள் குறைக்க சீரான மற்றும் சரியான உணவு முறை பின்பற்றுவதும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை அளவோடு எடுத்துக் கொள்ளவேண்டும்.

இரவு நேரத்தில் ஜங்க் உணவை தவிர்க்கவேண்டும். உடல் எடையை குறைக்கக்கூடிய சில உணவுகள், மற்றும் பழ வகைகள் தினசரி பழக வேண்டும்.

சோயா பாலில் குறைவான கலோரி இருப்பதால் உடல் எடை கூடுவதை தடுக்கும். முளைகட்டிய பச்சை பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலையை சம அளவில் சாப்பிட வேண்டும், கோதுமை சப்பாத்தி, முட்டையின் வெள்ளை கரு, ஆப்பிள், ஆரஞ்சு, செர்ரி போன்ற பழங்கள் சாப்பிடலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...