வகுப்பறையில் பிணக்குவியல் ஆவி அச்சத்தால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூடம்

Date:

Share post:

வகுப்பறையில் பிணக்குவியல் ஆவி அச்சத்தால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூடம்

மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூன்றும் ஒடிஷாவின் பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின.

உலகையே உறைய வைத்த இந்த சில நிமிட விபத்துகளால் மொத்தம் 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை 89 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருக்கின்றன.

ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் ஜூன் 2ஆம் தேதி மாலை ஏற்பட்ட வரலாறு காணாத ரயில் விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய கோர விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த கோர விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சேதமடைந்த நிலையில், அவற்றை உடல்களை பாதுகாப்பாக பதப்படுத்தி வைக்க பாரதீப் துறைமுகத்தில் இருந்து 5 கண்டெய்னர்களை ஒடிசா அரசு வாங்கியுள்ளது.

முதலில் விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்கள் அருகே உள்ள இடங்களில் கொண்டு வைக்கப்பட்டன.

வகுப்பறையில் பிணக்குவியல் ஆவி அச்சத்தால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூடம்

முக்கியமாக, பஹானகா என்ற பகுதியில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் தான் 200க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.

அது தற்காலிக சவக்கிடங்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அங்கிருந்து உடல்கள் அகற்றப்பட்டன.

அந்த பள்ளி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 16ஆம் தேதி திறக்கபடவுள்ளது.

ஆனால், பிணங்களை குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால் அந்த பள்ளிக்கு வர மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

அங்கு உயிரிழந்தவர்களின் ஆவிகள் உலாவுமோ என பலரும் பீதியில் உள்ளனர். பள்ளிக்கூடத்தை இடித்து புதிதாக கட்டினால்தான் வருவோம் என பெற்றோர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

முதலில் இதற்கு மாவட்ட ஆட்சியர் தத்தாரய பஹுசாகேப் ஷிண்டே தயக்கம் காட்டினார்.

உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளமே காண இயலாத அளவுக்கு சிதைந்துள்ளன. இந்த உடல்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் இறந்தவர் தங்களது உறவுதான் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒடிஷா ரயில் விபத்தில் 48 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். இவர்களது உடல்கள் பெரும்பாலும் கருகிய நிலையில் உள்ளன.

இதுவும் உறவினர்களால் அடையாளம் காணப்பட முடியாத நிலைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 43 பேர் இந்த ரயில் விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களை அடையாளம் காண பீகார் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து உறவினர்கள் ஒடிஷாவின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ஒடிஷா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் இன்னமும் சிகிச்சை பெறுகின்றனர்.

200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 1,100 பேர் காயமடைந்தனர். 900 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

ஆனால் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணுவதில்தான் சிக்கல் தொடருகிறது என்கின்றனர்.

இதனிடையே இணையதளம், சமூக வலைதளம் உள்ளிட்டவைகள் மூலமாக இறந்தவர்களின் படங்கள் வெளியிடப்பட்டு அடையாளம் காண உதவுமாறு அரசு தரப்பில் தொடர்ந்து வேண்டுகோள் முன்வைக்கப்பட்டும் வருகிறது.

இருப்பினும் உருக்குலைந்த உடல்களை அடையாளம் காண முடியாத நிலையே நீடிக்கிறது.

வகுப்பறையில் பிணக்குவியல் ஆவி அச்சத்தால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூடம்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...