This post is also available in:
Tamil
முருகன் வழிபாட்டின் நோக்கும் போக்கும்

முருக வழிபாட்டை மனித குலத் தோற்றத்தில் இருந்து தேடிக் கண்டறியலாம்.
முருக வழிபாட்டின் தோற்றம், காலந்தோறும் முருக வழிபாடு அடைந்த மாற்றம், கௌமாரம் என்ற தனி மதம், சைவம், வைணவம், பௌத்தம் என்று பல்வேறு மதங்கள் எப்படி முருகனை தம்முடையவனாக்கிக் கொண்டன.
வட நாட்டிலும் தென்னாட்டிலும் காணப்படும் முருக வழிபாடு, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் காணப்படும் முருக வழிபாடு என முருகனின் வழிபாடு குறித்து நீண்ட சமூகப் பண்பாட்டு ஆய்வு வரலாறு உள்ளது.
ஆதி பெண்
ஆதி பெண் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்த நிலையில் மனித சமுதாயம் கண்டறிந்த வழிபாடு குமரன் அல்லது முருகன் வழிபாடு.
இவன் அழகன்; குமரன்; வேல் தாங்கிய வீரன். அவன் தாயே தலைவி ஆவாள். அவளே அன்னை மகா சக்தி.
அவள் காட்டிய வழியில் அவள் அளித்த ஆயுதமாகிய வேலைக் கொண்டு இவன் பல வீரச்செயல்களை நடத்தி வந்தான்.
அனைவரையும் காக்கும் அன்னை அவளது வீரப்புதல்வன் என்ற இருவருமே ஆதி தெய்வங்கள். ]
இவன் தாயின் குழந்தை என்பதால் இவன் சிறுவன் என்ற பொருளில் சேயோன் எனப்பட்டான்.
சங்க காலத்து மக்கள் முருகன் என்ற பொதுச் சொல்லை மக்கள் அதிகம் பயன்படுத்தினாலும் அவன் ஒவ்வொரு இடத்திலும் காலத்திலும் மதத்திலும் நாட்டிலும் வெவ்வேறு பெயரால் குறிப்பிட்டுள்ளனர்.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் முருகனை சேயோன் என்கிறது. அவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம் ஆவான். சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நிலமே கூடலுக்குரிய இடமாகும்.
தலைவன் திருமணத்துக்கு முன்பு தலைவியுடன் கூடி மகிழ்ந்து காலங்கழித்த பின்னர் அவளைத் தேடி அவன் வராதபோது அவனைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தால் அவள் உண்ணாமல் உறங்காமல் தவித்து உடல் நலிந்து மகளின் இந்நிலையைக் கண்ட தாய் அவளுடல் நலிவுக்கான காரணத்தை அறிய அவ்வூர் சாமியாடியும் மருத்துவனுமான [SHAMAN] வேலனை அழைத்துக் குறி கேட்கிறாள்.
இங்கு வேலன் என்பவன் குறிஞ்சி நிலத்துத் தெய்வமான சேயோனின் பிரதிநிதி ஆவான், தெய்வமேறி ஆடல் என்பது மந்திரச் சமயச் சடங்குகளில் [magico religious ritual.] ஒன்றாகும்.
இன்றைக்கும் தொடரும் இந்நடைமுறை மனிதன் தன் வாழ்வில் தெய்வம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஆக, குறிஞ்சி நிலத் தெய்வமான சேயோனின் சாமியாடி வேலன் எனப்பட்டான்.
சங்க காலத்தில் வேலனை முருகன் என்றும் அழைத்ததாக இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. குறிஞ்சித் திணையின் கருப்பொருள் கூடலும் கூடல் நிமித்தமும் என்பதாகும். அகத்திணையியலை களவியல் [திருமணத்துக்கு முந்தைய காதல் நிகழ்வுகள்]. கற்பியல் [திருமணத்துக்குப் பிந்தைய இல்லற நிகழ்வுகள்] எனப் பிரித்த தொல்காப்பியர் களவு என்பதில் குறிஞ்சித்திணை ஒழுக்கத்தைச் சேர்த்தார். வேலன், சேயோன், முருகன் மற்றும் வள்ளித் திருமணம் ஆகியவை சங்க காலம் தொட்டு இருந்து வந்த பழந்தமிழ்த் தெய்வங்களும் கதை நிகழ்வுகளும் ஆகும்.
பவுத்தம் தமிழ்நாட்டில் பரவிய போது பல்லவர்களின் ஆதரவு பெற்று விளங்கியது பல்லவ மன்னர்கள் முதலில் குகைக் கோயில்களை உருவாக்கினர். சம நிலங்களில் கந்து [கம்பம்] இந்திரன் கோயிலுக்கு அடையாளச் சின்னமாயிற்று. பூம்புகாரில் இருந்த இந்திரனின் கோயிலை ‘கந்துடைப் பொதியில்’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில், மருத்துவா மலை [வள்ளிமலை, இந்திரன் பொத்தை], சபரி மலை, சதுரகிரி, பழனி, பொதிகை [பொதியில்] போன்ற மலைப்பகுதிகளில் பவுத்தர்கள் மறைந்து வாழ்ந்தனர்.
கணபதி ஆகியோருள் ஸ்கந்தனும் இடம்பெற்றான்.
தேவசேனாதிபதி ஸ்கந்தன்ஸ்கந்தனுக்கு சீனாவில் வியே து ஓ என்று பெயர்; [ஜப்பானில் இதா தென்]. இவன் அங்கும் தேவேந்திரனின் படைத் தளபதியே ஆவான். தேவேந்திரன் அளித்த வஜ்ராயுதத்தை படுக்கைவசமாக தன் திருக்கரங்களில் ஏந்தி இருப்பான். புத்தர் கோயில்களில் புத்தருக்கு நேரே ஸ்கந்தனுக்கு சந்நதி உண்டு. சீனாவில் ஸ்கந்தன் புத்த மடங்களின் காவல் தெய்வம். புத்த தர்மத்தை தனக்குப் பிறகு மாரனிடமிருந்து [ஆசை] பாதுகாக்கும்படி புத்தர் இவனுக்கு ஆணையிட்டார். பவுத்தக் கடவுளான காவல் தெய்வம் என்ற கருத்து சீனா, ஜப்பானில் இருப்பதை போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலக் கோயில்களிலும் உண்டு. இங்கு சுப்பிரமணியன் என்ற பெயரில் நாகங்கள் சூழ காணப்படும் இவன் புதையலின் காவலன் ஆவான்.
அறுகோணம்
என்பது சிவசக்தி சேர்க்கையைக் குறிப்பதால் கந்தன் என்பவன் மக்கட்செல்வத்தை அளிக்கும் வளமையின் அடையாளம் ஆகிறான். தமிழில் கச்சியப்ப சிவாச்சார்யாரால் கந்த புராணம்.
சைவம், வைணவம் பவுத்தம் என்று பல சமயங்கள் முருகனை, கந்தன் என்றும் கார்த்திகேயன் என்றும் கொண்டாடி வந்த நிலையில் சித்தரியம் அவனை வேறு விதமாகப் போற்றியது.
பவுத்தர்களும் சமணர்களும் மாமன்னர்களின் செல்வாக்கு இழந்து வைதிக சமயவாதிகளிடம் வாதில் தோற்றனர்.
அவர்களில் சமணர்கள் சைவர்களாக மாறினர். அவர்கள் முருகனையும் சிவனையும் [நடராசர்] மறைசமயக் கோட்பாடுகளின் அடையாளமாக்கிக் கொண்டனர்.
மனிதனின் புவியுலக வாழ்க்கை சிறப்பாக இருக்க உடல்நலம் பற்றி கவனம் செலுத்தினர். பரிபாஷையைப் பின்பற்றினர்.
பிராணாயாமம்
பிராணாயாமம் வள்ளலார், அறுவகை சக்கரம் மற்றும் குண்டலினி என்ற கருத்தாக்கத்திற்குள் முருகனைக் கொண்டு போய் அவனைச் சுப்பிரமணி என்று குறிப்பிட்டார்.
சிறந்த மணி, அப்பழுக்கற்ற மணி அல்லது வெண்மை மணி என்ற பொருளில் சுப்பிரமணி என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
விசுக்தி எனப்படும் இதயப் பகுதியில் அதன் இடது புறத்தில் ஆறு தலை உடைய ஒரு நாடி உண்டு, அதைச் சுப்பிரமணி என்று குறிப்பிட்டார்.
புருவ மத்தியில் ஆறு பட்டையாகத் தோன்றிய ஜோதிமணியை ஆறுமுகம் அல்லது சண்முகம் என்றார்.
ஆறு ஆதாரச் சக்கரங்களில் தோன்றும் ஆறு ஒளியையும் சுப்பிரமணி சுத்தமான ஒளி என்றார்.
அந்தணர்களின் சுப்பிரமணிசித்தர்கள் [பவுத்தர்கள்] முருகனை சித்த சுத்த கோட்பாடாக வணங்கிப் போற்றிய காலத்தில் மீண்டும் வைதிகர்கள் முருகனை தமக்கென்று சொந்தம் கொண்டாடினர்.
‘ சு பிராமணர் என்றால் நல்ல பிராமணன், தேர்ந்த பிராமணன்; பிரமம் என்றால் சத்யமான பரமாத்மா சொரூபம் என்று மாத்ரமே அர்த்தம்
பண்ணிக் கொள்கிறோம். பிரம்ம என்ற பதத்துக்கு இன்னொரு முக்கியமான அர்த்தம், வேதம் என்பது. வேதத்தை அனுசரிப்பது. அனுஷ்டிப்பது.
சங்க இலக்கியத்தில் காணப்பட்ட சேயோன், அவனது சாமியாடி வேலன், வட நாட்டிலும் பவுத்தத்திலும் உள்ள இந்திர சேனாதிபதி ஸ்கந்தன், புராணங்களில் சிவனின் குடும்பத்தைச் சேர்ந்த கந்தன், சித்தர்களின் முருகன் [சுப்பிரமணி].
இன்று வைதிகர்கள் சுப்பிரமணியராக கோட்பாட்டளவில் வளர்ந்து வந்துள்ளான்.
This post is also available in:
Tamil