மாம்பழம் சாப்பிட்டால் முகப்பரு வருமா..?

Date:

Share post:

மாம்பழம் சாப்பிட்டால் முகப்பரு வருமா..? இப்படி சாப்பிடுங்க.. வராமல் தடுத்திடலாம்..!

Can eating mangoes cause acne? Eat like this.. you can prevent it from coming..!

மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது.

இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது சருமத்திற்கும் அத்தியாவசியமானது.

மாம்பழம் சாப்பிட்டால் தான் கோடை காலமே பலருக்கு நிறைவு பெறுகிறது. மாம்பழங்களில் பல வகை உண்டு. அவற்றில் எந்த வகை மாம்பழத்தை வாங்குவது என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

இந்த பருவகால பழத்தில் சுவை மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது.

இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது சருமத்திற்கும் அத்தியாவசியமானது.

எனினும், ஒரு சிலருக்கு துரதிஷ்டவசமாக மாம்பழம் சாப்பிட்டாலே முகப்பரு வந்து விடுவதுண்டு.

இதற்கு அஞ்சி கொண்டு மாம்பழங்களை ஓரிரு துண்டு மட்டுமே ருசிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆனால் மாம்பழம் சாப்பிட்டால் ஏன் முகப்பரு ஏற்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம். மாம்பழம் அதிக கிளைசெமிக் எண் கொண்டது என்பதால், இது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

ஆகவே இன்சுலின் எதிர்ப்பு கொண்ட நபர்கள் எளிதாகவே முகப்பருவை பெறுகிறார்கள்.

மாம்பழம் மட்டுமல்லாமல் சாக்லேட்டுகள், ஜங்க்ஃபுட்ஸ், மிட்டாய்கள் போன்ற அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட எல்லா வகையான உணவுகளும் நேரடியாக நமது எண்ணெய் சுரப்பியை பாதிக்கிறது.

இதன் காரணமாக சீபம் சுரப்பு அதிகரிக்கப்பட்டு முகப்பரு தோன்றுகிறது.

இது தவிர மாம்பழம் சாப்பிடும் பொழுது முகப்பரு ஏற்பட வேறு சில காரணங்களும் உள்ளன என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகிறது. அவற்றையும் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்:-

1.மாம்பழங்களில் காணப்படும் சிட்ரிக் அமிலம் ஒரு சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் வீக்கம் ஏற்பட்டு முகப்பரு உண்டாகிறது.

2.தற்போது கிடைக்கக்கூடிய பெரும்பாலான மாம்பழங்கள் இயற்கையாக வளர்க்கப்பட்டவை அல்ல. செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட மாம்பழங்கள், செயற்கையாகவே பழுக்கவும் வைக்கப்பட்டு நமது கைக்கு கிடைக்கின்றன. இதனை சாப்பிடும் பொழுது நமது சருமம் பாதிப்பிற்கு உள்ளாகி முகப்பரு ஏற்படுகிறது.

3.ஆரோக்கியமற்ற மாம்பழம் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயமாக நல்லதல்ல. அதோடு அது நமது சருமத்தையும் பாதிக்கிறது.

எனினும் மாம்பழம் சாப்பிட்டே ஆக வேண்டும், ஆனால் முகப்பரு வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் வழி இருக்கிறது :

    • மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை இரண்டு முதல் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இது மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான பைட்டிக் அமிலத்தை நீக்குகிறது. பைட்டிக் அமிலம் என்பது நமது உடலில் இரும்புச்சத்து, சின்க், கால்சியம் மற்றும் மினரல்களை உறிஞ்சுவதை தடுக்கக்கூடிய ஒரு எதிர்ப்பு ஊட்டச்சத்து ஆகும். நமது உடலில் வெப்பத்தை உருவாக்கக்கூடிய அதிகப்படியான பைட்டிக் அமிலத்தை நாம் நீக்கும் பொழுது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் எளிதாக நடைபெறுகிறது. இது முகப்பரு, சரும பிரச்சனைகள், தலைவலி,மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
  • மாம்பழத்தை தனியாக சாப்பிடவும் அதனை பிற உணவுகளோடு இணைத்து சாப்பிடக்கூடாது. பிற உணவுகளோடு மாம்பழத்தை சாப்பிடுவது முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளையும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கலாம். ஆகவே உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு மாம்பழங்களை ருசியுங்கள்.
  • மாம்பழத்துடன் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதை சாப்பிடுவது உங்களுக்கு உதவ கூடும். இது இயற்கையாகவே குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தி முகப்பரு ஏற்படுவதை தடுக்கிறது.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...