முக சுருக்கங்களை முற்றிலும் நீக்கும் எளிய வீட்டு வைத்தியம்

Date:

Share post:

முக சுருக்கங்களை முற்றிலும் நீக்கும் எளிய வீட்டு வைத்தியம்

சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும் சருமத்தை வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வரலாம்.

வயதாகிவிட்டால் தான் சருமமானது சுருக்கத்துடன் காணப்படும். ஆனால் தற்போது 20 வயதிலேயே சருமம் சுருக்கமடைந்து முதுமைத் தோற்றத்தைத் தருகிறது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான சரும பராமரிப்பு இல்லாதது, முகத்தை அழுத்தியவாறு தூங்குவது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவைகள் முக்கியமானவையாகும்.

சருமத்தை அதிக அளவில் வறட்சி அடைய வைத்தாலும், சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படும்.

எனவே சருமத்தை வறட்சியடையாமல் பர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வாரம் ஒருமுறை அல்லது அன்றாடம் சருமத்தை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் கொண்டு பராமரித்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம்.

வாழைப்பழ பேஸ் பேக்

இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும்.

அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள்.

வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

தயிர் பேஸ் பேக்

தயிர் மாஸ்கிற்கு இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.

இதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

அதே நேரத்தில், எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

தினமும் இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சியிலிருந்து விடுபடலாம். ஆனால் எண்ணெய் சருமத்தில் இந்த செய்முறையை முயற்சிக்காதீர்கள்.

அரிசி பேஸ் பேக்

இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலக்கவும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முழு முகத்திலும் தடவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவவும்.

இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை தடவுவது நல்லது. அரிசி மாவில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் இருப்பதால், கொரிய தோல் பராமரிப்புப் பொருட்களில் அரிசி மாவு அல்லது தண்ணீர் கண்டிப்பாக சேர்க்கப்படும்.

தினமும் இரவில் படுக்கும் முன் கிளிசரின், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும்.

இப்படி செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்களானது கிடைத்து சரும சுருக்கங்களானது மறையும்.

அன்னாசிப் பழத்தைக் கொண்டு முகத்தை தேய்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சரும சுருக்கங்களானது நீங்கிவிடும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...