International Yoga Day 2023 : தினமும் யோகா பயற்சி செய்வதால் என்ன நடக்கும்?

Date:

Share post:

International Yoga Day 2023 : தினமும் யோகா பயற்சி செய்வதால் என்ன நடக்கும்?

International Yoga Day 2023 : What happens when you practice yoga every day?

தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதால் உடலும், மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும் என நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் யோக பயிற்சியாளர் சுடலையாண்டி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகா பயிற்சியாளர் சுடலையாண்டி கலந்துகொண்டு பேசினார்.

ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் வாழும் கலை நிறுவனத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் சுடலையாண்டி பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதியும், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் தலைவர் சீனிவாசன் தலைமையில் திருநெல்வேலி வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஸ்வரன், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் யோகா பயிற்சி குறித்து வாழும் கலை நிறுவனத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் சுடலையாண்டி பேசுகையில், “யோகா பயிற்சி மேற்கொள்வதால் முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது.

ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. மேலும் முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வழிவகை செய்கிறது.
தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும்.

மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். மன அமைதி தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது.

நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம்.யோகா பயிற்சி செய்வதால் மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி கல்வி கற்கலாம்” என அவர் தெரிவித்தார்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...