நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர்

Date:

Share post:

நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர்

ராணிப்பேட்டை:

நவக்கிரஹ கோட்டை, ஐஸ்வர்ய க்ஷேத்ரம், காமாக்ஷிபுரம், வாலாஜா பேட்டையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர் நினைத்ததை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவர்.

இவரை சரணாகதி அடையும்போது குபேர சம்பத்தும் தைர்ய, வீர்ய, ஆரோக்யமும் கிடைக்கும்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் வரும் மே 22ஆம் தேதியன்று திங்கட்கிழமை மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.

அகத்திய மஹா முனிவர் இந்த க்ஷேத்திரத்தில் சிவ பூஜை செய்து வரம் பெற்றவர். ஆகவே அகஸ்தீஸ்வரம் என்பது புராணப் பெயராகும்.

பின்பு முகலாயர்கள் வருகைக்கு பின் அழைக்கும் பெயர் தான் வாலாஜாபேட்டை.

இந்த க்ஷேத்ரத்தின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு திசைகளிலும் சதுர் திக் பந்தனமாக அனுமனின் ஆலயம் பல நூற்றாண்டுகளாக வழிபாட்டில் இருக்கிறது.

அவ்வகையில் குபேர திசையில் ஊரின் வடக்கு பகுதியில் குபேர மூலையாக வடக்கு திசையில் வடக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாகவும் புடைப்புச் சிற்பமாகவும்.

தலைக்கு மேல் வாலுடன் மணி கட்டிய ரூபத்தில் ஆசி வழங்கும் அபய ஹஸ்தத்துடன் சௌகந்தி புஷ்ப கதையுடன் திருக்குளத்தோடு சுமார் 221 கோடி ராமநாம பிரதிஷ்டையோடு அபரிமிதமான மந்திர அதிர்வுகளோடு வேண்டுவோர்க்கு வேண்டும்.

வரம் தருபவர்தான் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர். இங்கு ஹனுமன் பூஜித்த ஸ்ரீ ராமபாதம் இருப்பது மிகப்பெரிய விசேஷம்.

ரீ ராம பாத தரிசனம், சகல பாப நிவாரணம். ராஜா கிருஷ்ணதேவராயர் 18 ஆண்டு கால ராகு தசை நடக்கும் நேரத்தில் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்தார்.

அதற்கு தீர்வு காணும் விதமாக பரிகாரம் தேடி அவரது குருநாதர் வியாசராயரை அணுகிய போது (ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் குருநாதர்) .

அவர் இந்த 18 ஆண்டு காலம் உனக்கு நீ நினைப்பது தங்கு தடையின்று நடைபெற வேண்டுமானால் நீ விஜயம் செய்யும் அத்தனை க்ஷேத்திரங்களிலும் உள்ள ஆஞ்சனேயரை வழிபட்டு.

அங்கு நாக பிரதிஷ்டை செய்து ராகு கேதுவை மனதார வணங்கும் போது நன்மைகள் நடக்கும் என்று கூறினார்.

அவ்வாறு இந்த ஆலயத்திலும் ராகு கேது நாகர், காளிங்க நர்த்தன சந்தான கிருஷ்ண நாகர், சந்தர கிரண நாகர் என மூன்று நாகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மேன்மை அடைந்ததாக ஐதீகம்.

ஆகவே இவ்வாலயத்தில் எந்தவொரு பக்தர் பரிபூர்ண சரணாகதியோடு பிரார்த்தனை செய்தாலும் அவர்களுக்கு நவக்ரஹ தோஷமும், ராகு கேது தோஷமும் நிவர்த்தியாகும்

இங்கு ஆஞ்சநேயர் வாலில் நவக்ரஹங்களும் இருப்பதாக ஐதீகம்.

ஆகவே குபேர ஆஞ்சநேயரை தரிசித்து நவக்ரஹ கோட்டையில் நவக்ரஹ தெய்வங்களை பத்தினி வாகன சகிதமாய் ஸேவிக்கும் போது நவக்ரஹங்களும் உங்களுக்கு நன்மையே அனுக்கிரஹம் செய்வார்கள்.

திருக்குளக்கரையில் நவக்ரஹ கணபதி மற்றும் க்ருஷ்ண தேவராயர் வழிபட்ட மூன்று நாக தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதி இருப்பது இக்கோயிலின் மற்றுமொரு விசேஷம்.

மஹா மண்டபத்திலுள்ள 16 கால் தூண்களும் 16 செல்வ வளங்களை தருவதாகும்.

இந்த ஆலயத்தில் எங்குமில்லாத வண்ணம் 108 தெய்வ சிற்பங்களை தரிசனம் செய்ய முடியும்.

அதில் ராமாயண வரலாற்றில் ராமர் குழந்தையாக பிறந்தது முதல் மன்னனாக முடிசூடி, பட்டாபிஷேகம் நடந்தது வரை ராமாயணம் சுந்தரகாண்டம் என அனைத்தும் 16கால் மண்டபத்தில் காட்சி தருகிறது.

ஆலய வளாகத்தில் ஸ்ரீ ஹனுமான் லக்ஷ்மண சஹித ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்திக்கென தனி சந்நிதானம் மற்றும் பக்த பிரகலாதருடன் லக்ஷ்மீ நரசிம்மர் ஷட்கோண ஜ்வாலா சக்ர சஹித சுதர்சன மூர்த்திக்கும் தனி சன்னிதி உள்ளது.

அதைத் தொடர்ந்து நவக்ரஹ கோட்டையில் நவக்ரஹ தெய்வங்களுக்கு பத்னி வாஹனத்தோடு 9 தனித்தனி சன்னிதானம், அஷ்டநாக மண்டபம், 27 நட்சத்திர மூர்த்திகளும், 12 ராசி தேவதைகளும், மற்றும் கண்திருஷ்டி போக்கக் கூடிய கண்திருஷ்டி கணபதி மூலவரும் இங்கு அனுக்ரஹம் செய்கிறார்.

மாங்கல்ய பாக்யம் அளிக்கும் ஸ்ரீ நவக்கிரஹ நாயகியான, பங்காரு காமாக்ஷியின் பாதகமலங்களில், 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், நவகிரஹங்களும் பூஜிக்கும் விதமாக அன்னை போல் தாயுள்ளம் கொண்டு அனுக்ரஹ தரிசனம் தருகிறாள், ஐஸ்வர்ய மண்டபத்தில் சகல தேவதைகளும், வ்ருஷபாரூடனாக அர்த்தநாரீஸ்வரரும் காட்சியளிக்கின்றனர்.

ஷண்முக நாயகனாக சத்ரு சம்ஹார சுப்ரமண்ய மூர்த்தி வள்ளி தெய்வானையோடு யானை வாகனத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.

அதை தொடர்ந்து அம்பாளின் படைத் தளபதியாக வாராஹி தேவியும், துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ரூபமாக ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரியும், அம்பாளின் வலதுபுறம் மஹாலக்ஷ்மி தாயாரும், இடதுபுறத்தில் மஹா சரஸ்வதி தேவியும், அறிவையும் செல்வத்தையும் வாரி வழங்கும் ரூபமாக அனுக்ரஹம் செய்கிறார்கள்.

காவல் தெய்வமாகவும் க்ஷேத்ரபாலகராகவும் மஹா காலபைரவர் ஈசான மூலையில் (வடகிழக்கு) அருளாசி வழங்குகிறார்.

மற்றும் சிவபெருமான் அதிகார நந்தியுடன் தரிசனம் தருகிறார். காமாக்ஷியின் ஸ்வரூபமாக இருக்கக்கூடிய காஞ்சி மஹா பெரியவா ஸ்வாமிகள்

அம்பாளின் முன்பு த்யான ரூபமாக அமர்ந்து பக்தர்களை ஜெகத் குருவாக வழிநடத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து பாதாள சாய்பாபா தரிசனமும் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் சுவாமியின் மூலஸ்தான கோபுர தரிசனமும் கோடி புண்ணியப் பலன்களையும் அமைதியையும் தரவல்லது.

எதிரே திருக்குள அமைப்பை காண்பது எண்ணிலடங்கா ஆனந்தத்தையும் மன அமைதியையும் தரும் என்பது ஸர்வ நிச்சயம்.

அதைத் தொடர்ந்து ‘தடாக பிரதக்ஷிணம்-தடங்கல் நிவராணம்’ என்பதற்கேற்ப பாதாள கங்கா தீர்த்தமான திருக்குளத்தை தரிசிப்பதாலும் பிரதக்ஷிணம் செய்வதும் முப்பத்து முக்கோடி தெய்வங்களையும் வணங்கும் பலன் ஏற்படும்.,

கோசாலைக்கு அருகில் ஸ்தல விருக்ஷமான வில்வ மரம் அமைந்துள்ளது.

மஹாரத உற்சவ மண்டபம், தசாவதார தரிசனம், அஷ்டலிங்க பிரதக்ஷிணம் போன்ற சிறப்பம்சங்களும் இவ்வாலயத்தில் இருக்கிறது.

ஆகவே பக்தர்கள் இந்த ஆலயத்தில் 48 நிமிடமோ அல்லது 48 நொடியோ அமர்ந்து பிரார்த்தனை செய்தாலே நினைத்தது நிறைவேறும், வேண்டியது நடக்கும்.

இங்கு பலகோடி ஸ்ரீராமஜெயம் ராமநாமங்களோடும், சிவா விஷ்ணு ஆலய அமைப்போடும், ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் அருளாசிபுரிகிறார்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் வரும் மே 22ஆம் தேதியன்று திங்கட்கிழமை மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.

மே 17ஆம் தேதி முதலே விழாவிற்கான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள், இறைவன்காடு வனதுர்கா பீடம் ஸ்தாபகர் ஸ்ரீ பிரசாத் ஸ்வாமிகள்,

ஸ்ரீ சண்முக சுந்தர சிவாச்சாரியார் உள்ளிட்ட ஆன்மீக பெரியோர்களும், அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சித்தலைவர்களும் பங்கேற்று அருளாசி வழங்க உள்ளனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...